முடிவை சிந்தித்துக்கொள்ளுங்கள்

February 14th, 2017

 

டேவிட் லிவிங்ஸ்டன் இங்கிலாந்திலிருந்து இருண்ட கண்டமென அழைக்கப்படுகிற ஆப்பிரிக்கா கண்டத்திற்கு மிஷனெரியாகச் சென்றார். ”இதோ உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்.” (மத் 28:20) என்ற வசனத்தை மாத்திரம் பற்றிக்கொண்டு புறப்பட்டார். ”கூட இருக்கிறேன்” என்ற நிகழ்கால (Present Tense) வார்த்தை தான் அவருக்கு ஊக்கமளித்தது. அந்த வார்த்தையையே கடைசிவரை பற்றிக்கொண்டார்.

அவருடைய வாழ்க்கையின் கடைசி நாளில் நடந்த சம்பவம் மிகவும் சிறப்புவாய்ததாகும். அதிகாலையில் இருட்டோடு எழுந்து தன் அறையில் முழங்காலில் நின்று வேதத்தை மிகவும் சிரமப்பட்டு வாசித்துக் கொண்டிருந்தார். அன்று விளக்கு இல்லாத காலம். அவருக்கு பணிவிடை செய்பவர் தேநீர் கொண்டுவந்து கொடுத்துவிட்டு ” ஐயா, சிறிது வெளிச்சம் வந்தபின் வேதம் வாசிக்கலாமே” என்று சொன்னார். அதற்கு அவர் ” நான் மரிப்பதற்கு முன்பாக வேதத்தில் நான் நிறைவேற்றும்படி தேவன் சொல்லியிருப்பவையெல்லாம் நான் நிறைவேற்றியிருக்கிறேனா என்று சோதித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னார். பணியாளர் சென்றுவிட்டார். வெகுநேரம் கழித்து காலை உணவை ஆயத்தம் செய்து கொண்டு பணியாளர் வந்தார். அப்பொழுதும் முழங்காலிலேயே நின்றார். வேதபுத்தகம் கட்டிலில் வைக்கப்பட்டிருந்தது. இருகைகளையும் படுக்கையில் ஊன்றி முழங்கால்படியிட்டவாறே நின்றார். ”ஐயா, காலை உணவு கொண்டு வந்திருக்கிறேன்” என்றார். அவர் பதில் ஏதும் சொல்லவில்லை. மீண்டும் சொன்னார். பதில் எதுவுமில்லை. பின்னர் அவரைத்தொட்டு, இலேசாகத் தட்டி கூப்பிட்டுப் பார்த்தார். அவர் ஜீவன் பிரிந்து போய்விட்டதை பணியாளர் விளங்கிக்கொண்டார். நம்முடைய மரண நாளுக்கு முன்பாக வேதத்தில் தேவன் நாம் செய்து முடிக்க வேண்டியவை என எதிர்பார்த்து சொல்லப்பட்டவைகளை நிறைவேற்ற நாம் அக்கரை உள்ளவர்களாக இருக்கிறோமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்.

தேவ மனிதனாகிய டேவிட் லிவிங்ஸ்டனின் முடிவைப்பாருங்கள். தன் முடிவை முன்னறிந்தவராக தன்னை சுயபரிசோதனை செய்த மனப்பக்குவத்தைச் சிந்தித்துப் பாருங்கள். முழங்கால்படியிட்டு ஜெபித்த வண்ணமாகவே, தான் நேசித்து, சேவித்த இயேசுவினிடத்தில் சென்றடைந்துள்ளார் என்பதை எண்ணப்பாருங்கள். எவ்வளவு பெரிய சிலாக்கியத்தைப் பெற்றுள்ளார்!

“அவர்கள் ஞானமடைந்து, இதை உணர்ந்து, தங்கள் முடிவைச் சிந்தித்துக் கொண்டால் நலமாயிருக்கும் என்றார்” (உபா 32:29)

Best Web Design Batticaloa