சிக்கலை மேற்கொள்ள ஞானம்

April 26th, 2017

உங்கள் மேல் குற்றம் கண்டு பிடிக்க உலகம் வகை தேடுகிறது. எந்த கண்ணியிலே விழவைக்கலாம்? எந்த சிக்கலிலே மாட்டி வைக்கலாம்? என்று உங்களை சுற்றி சுற்றிவருகின்றன. சாத்தானுடைய பெயரே குற்றஞ்சாட்டும் சத்துரு என்பதாகும். உங்கள் கால்களை கண்ணியிலே விழவைப்பதற்கும், உங்களை மட்டம் தட்டி முன்னேற விடாதபடி தடுப்பதற்கும் அவன் இரவும், பகலும் முயற்சித்துக் கொண்டே இருக்கிறான். எதிரிகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் போது கூட மிக ஞானமாக பதிலளிக்க வேண்டும்.

கேள்வி கேட்கக் கூடிய மூடர்களிலே இரண்டு கூட்டத்தார் உண்டு. ஒன்று அறியாமையினால் கேள்வி கேட்கும் மூடர்களிலே இரண்டு கூட்டத்தார் உண்டு. ஒன்று அறியாமையினால் கேள்வி கேட்கும் மூடர். இரண்டாவது உங்களை கண்ணியிலே சிக்க வைக்க, தந்திரமாக தீய நோக்கத்தோடு கேள்வி கேட்கும் மூடர் சாலோமோன் ஞானி சொல்லுகிறார். “மூடனுக்கு அவன் மதியீனத்தின்படி மறு உத்தரவு கொடாதே, கொடுத்தால் நீயும் அவனைப் போலாவாய்” (நீதி 26:4) “மூடனுக்கு மறு உத்தரவு கொடு, கொடாவிட்டால் அவன் தன் பார்வைக்கு ஞானியாயிருப்பான்.” (நீதி26:5) உண்மையாய் பிரச்சனைகளுக்கு தீர்வு கேட்க விரும்புகிறவர்களுக்கு ஞானத்தோடு பதில் உத்தரவு கொடுங்கள். ஆனால் உங்களை மட்டம் தட்டி, தங்களை பெரியவர்களாக்க முயற்சிக்கின்ற மூடருக்கு பதில் கொடுக்க வேண்டியதில்லை.

இயேசுக் கிறிஸ்துவினிடத்தில் குற்றம் கண்டு பிடிக்க வேதபாரகர், பரிசேயர், சதுசேயர் வந்து கேள்வி கேட்டார்கள். இயேசுவை சிக்கலில் மாட்டிவிட வேண்டும் என்பதே அவர்கள் நோக்கம். “இராயனுக்கு வரி கொடுப்பது நியாயமோ? அல்லதோ? அதை எங்களுக்கு சொல்லும்” என்று கேட்டார்கள். இராயனுக்கு வரி கொடுக்க வேண்டியது நியாயம் என்று சொன்னால்  யூதருக்கு விரோதியாக வேண்டியிருக்கும். கொடுக்கக் கூடாது என்று சொன்னால், ரோம அரசாங்கத்திற்கு விரோதியாக வேண்டியிருக்கும்.

இயேசு அவர்கள் துர்க்குணத்தை அறிந்து வரிக்காசை எனக்குக் காண்பியுங்கள் என்றார். அவர்கள் ஒரு பணத்தை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். அப்பொழுது அவர் இந்த சுரூபமும், மேலெழுத்தும் யாருடையது என்று கேட்டார்.  இராயனுடையது என்றார்கள். அதற்கு அவர் அப்படியானால், இராயனுடையதை இராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் செலுத்துங்கள் என்றார். (மத்22:18-21) கர்த்தர் ஏன் உங்களுக்கு ஞானத்தை தரவிரும்புகிறார்? வஞ்சகர்கள் விரிக்கும் வலையிலிருந்து உங்களைப் பாதுகாத்து கொள்வதற்காகவே! ஞானவரம் உங்களுக்கு எவ்வளவு அவசியம் பாருங்கள்.

Best Web Design Batticaloa