நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா…?

April 26th, 2017

“…யோனாவின் குமாரனாகிய சீமோனே இவர்களிலும் அதிகமாய் நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா…? (யோவான் 21:15)

உயிர்த்தெழுந்த இயேசுகிறிஸ்து சீடரை திபேரியா கடற்கரையில் சந்தித்தபோது பேதுருவிடம் அவ்வாறு கேட்கிறார்.

அன்பு செலுத்துதல் இன்று பல விதத்தில் வெளிப்படுத்தப்படுகின்றது. பெற்றோர் பிள்ளைகளை நேசிப்பதை வெளிப்படுத்துவதாயின் அவர்களை கண்டிக்காமல் விடுவதுதான் நவீன அன்பின் வெளிப்பாடு. நண்பர்கள் அன்பை வெளிப்படுத்த Facebook-இல் குறிப்பு இடுதல் அதுமட்டுமல்ல WIFI-இல் செய்தி அனுப்புதல் என பல நவீன வெளிப்பாடுகள் இன்று உலகில் அலை மோதுகின்றது.

ஆனால் இங்கு இயேசு பேதுருவின் அன்பின் வெளிப்பாட்டை வேறுவிதமாக எதிர்பார்க்கிறார். “என் ஆடுகளை மேய்ப்பாயாக…”

எதிர்பார்ப்பை நிறைவேற்ற ஆரம்பித்த பேதுருவினது முதலாவது பிரசங்கத்தின் மூலம் 3000 பேரும் இரண்டாவது பிரசங்கத்தின் மூலம் 5000 பேரும் சபையிலே சேர்க்கப்பட்டனர்.

நாம் எந்தளவிற்கு இயேசுவை நேசிக்கிறோம்???

இன்று இயேசுகிறிஸ்துவை நேசிக்கிறோம் என்கிற நம்மிடமும் இயேசுவின் எதிர்பார்ப்பு இவ்விதமான வெளிப்படுத்துதலேயாகும் இதற்கு நமது பதில் என்ன???

Best Web Design Batticaloa