உன்னால் இதை செய்யக் கூடுமா?

December 9th, 2013

“நீ தீமையை நன்மையினாலே வெல்லு” (ரோமர் 12.21)

 அர்மினியாவில் கொடுமையான பயங்கர சம்பவங்கள் நடந்து கொண்டிருந்தது அந்நாட்களிலே………

ஒரு இளவயதுள்ள பெண்மனியும், அவளுடைய சகோதரனும் துருக்கிய போர்வீரர்களுக்குப் பயந்து ஒரு தெருவழியாக அங்கும் இங்கும் பார்த்தபடியே, ஓடிக்கொண்டிருந்தார்கள். அந்த தெருவின் திருப்பத்திலே, எதிர் பாராத விதமாக துருக்கிய வீரன் ஒருவனால் மடக்கிப் பிடிக்கப்பட்டார்கள். அவன் பிடியிலிருந்து தப்பிக்க எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. குறுகலான பாதையும் நெருக்கடியான சூழலும் பாதகமாக அமைய, உயிர் பிழைக்க வழியின்றி இருவரும் விளித்து நின்றனர்.

நீண்டதூரம் ஓடி வந்த களைப்பு! எதிரிகளைக் குறித்த பயம்! இனி நிகழப்போவதைப் பற்றிய பீதி! இவர்கள் இருதயத்தை வெகு அதிகமாக அதிர வைதித்து.

பிடிபட்ட ஒரு சில நிமிடங்களில்…….

ஆயுதமணிந்த அந்த மனிதன், அவர்களிடத்தில் எதுவும் விசாரிக்காமல், தனது துப்பாக்கியை தயாராக்கினான். இருவரையும் மாறி மாறி வெறித்தனமாக பார்த்தான்.

நடக்கப்போவதை தீர்மானித்த அப்பெண்மனியும், அவள் சகோதரனும் மிக அமைதியாக பலி ஆடுபோல் நின்றனர். கண் இமைக்கும் நேரத்தில் அந்த பயங்கர சம்பவம் நடந்து முடிந்த்து.

ஆம்! இரக்கமில்லாத மிருகத்தனமான அந்த மனிதனுடைய துப்பாக்கிக் குண்டு அவள் சகோதரன் மீது பதிந்ததால் பரிதாபமாக கொல்லப்பட்டான். தன் கண்ணுக்க முன்பு துடிதுடித்து மரித்துக் கொண்டிருந்த சகோதரனையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டு நின்ற அந்த பெண்மணியிடம், அவன் சிரித்துக் கொண்டே சொன்னான்….. ம் ஓடு! உன் உயிர் தப்ப, நீ எங்காவது ஓடிப்போ என்று விரட்டினான்.

அவனுடைய கைக்கு நீங்கலாகி, மீட்படையும்படி தன் கால் போன போக்கில் ஓடினாள், அவள்.

சில ஆண்டுகள் கடந்த்து. நிராதரவான நிலையில் உயிர் தப்பி ஓடிவந்த பெண்மணிக்கு, ஒரு ராணுவ மருத்தவமனை புகலிடம் அளித்தது. தான் கண்ட சகோதரனின் பரிதாபமான மரணத்தை மறக்கும் படி, அங்குள்ள நூற்றுக்கணக்கான பிணியாளிகளுக்கு தாதியாக தன்னால் இயன்றளவு சேவை செய்துகொண்டு ஒரு நடைபிணம்போல் வாழ்ந்து வந்தாள், அந்தப் பெண்மனி.

ஒரு நாள்…. ஒரு பேர் வீரனை மிகவும் ஆபத்தான நிலையில், அவள் பணிபுரியும் மருத்துவப் பிரிவுக்குக் கொண்டுவந்தனர். அவனைப் பார்த்ததும் இந்த தாதிப் பெண்ணின் முகம் விகாரப்பட்டது. நடந்த அந்த கோரச் சம்பவம் அவள் கண்முன் நிழலிட்டது.

ஆம்! சகோதரனைப் கொன்ற அதே போர்வீரன், அதிகமான காயங்களோடு மயங்கிக் கிடந்தான். அவனுக்கு சிகிச்சை அளிப்பதில் சற்று தாமதித்தாலும், மரணம் நிச்சயம்.

அந்நிலையில் தாதியின் மனதில் பயங்கர போராட்டம். அவளுடைய பழைய சுபாவம் “இதுதான் சமயம் அவனைப் பழிவாங்கு” எனத் தூண்டியது. ஆனால் மெல்லிய தேவ சத்தமோ, “இதுவே தருணம் இரக்கம் காண்பி”  என்று அழைத்தது.

நீண்ட போரட்டத்திற்குப் பின்…. ஆவியானவரின் அழைப்பிற்கு அடிபணிந்து, பொறுமையுடன் அவனுக்குச் சிகிச்சையளித்தாள். தாதியின் மனப்பூர்வமான அன்பும், கரிசனையோடுகூடிய பொறுப்புள்ள கவனிப்பும் வெகு சீக்கிரமாக, அவன் ஆரோக்கியம் பெறச் செய்தது.

நாளடைவிலே, காயமடைந்த அந்த துருக்கிய போர்வீரன் தன்னை அன்போடு கவனிக்கும் தாதி யார் என்று கண்டுகொண்டான். தன் கொடிய இரக்கமற்ற செயலுக்காக மனங்கசந்து அழுதான். எப்படியாவது மன்னிப்புக் கேட்கவேண்டும் என்ற துடிப்பு நாளுக்கு நாள் அவனுக்குள் அதிகமானது.

ஒரு மதிய வேளை….. வழக்கம்போல் மாத்திரைகளை கொண்டு வந்து அவனிடம் கொடுத்தாள் தாதி.

அவளைக் கனிவோடு பார்த்த போர்வீரன், என்னை யாரென்று உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்குமே. ஆனால் நீங்கள் ஏன் என்னை சாக விடவில்லை என்று கேட்டான். தாதி அதற்கு சுருக்கமாகப் பதிலளித்தாள்.

“நான் இயேசு கிறிஸ்துவை பின்பற்றுகிறவள். உன் சத்துருக்களை சிநேகி என்று இயேசு சொல்லியிருக்கிறார் அல்லவா?”  என்றாள்.

போர்வீரன் நெடுநேரம் மௌனமாயிருந்தான். பின்பு மெல்லிய குரலில்.  “இப்படிப்பட்ட விசுவாசம், ஒருவருக்கு இயேசுவின் மேல் இருக்கக்கூடும் என்று, நான் அறிந்திருக்கவில்லை, என்னிடம் இவ்வளவு தூரம் உண்மையான அன்பை வெளிப்படுத்த உங்களால் முடியுமானால், நீங்கள் வணங்குகிற தேவனை அறிந்து கொள்ள நான் ஆசைப்படுகிறேன். அவரைக் குறித்து எனக்கு அதிகமாக சொல்லுங்கள். அவர் எனக்கு கட்டாயம் வேன்டும்” என்றான்.

கொடிய சுபாவங்களோடு கடின மனங்கொண்ட அவன், இயேசு கிறிஸ்துவன்டை அன்று நடத்தப்பட்டான்.

தேவனுடைய வார்த்தையின் படியே மன்னித்து, மறந்து, விரோதமாக இழைக்கப்பட்ட தீமைக்குப் பதிலாக அன்பு காட்டக் கூடிய சிந்தையை இந்த தாதியைப்போல நாமும் வெளிப்படுத்தக் கூடுமா?

அப்படியானால், வார்த்தைகளை விட நம் வாழ்க்கை பிறரை நிச்சயமாகவே கிறிஸ்துவண்டை வழி நடத்தும்.            

mathy1
Best Web Design Batticaloa