உபாகமம்

March 9th, 2015

 

01.ஓரேப் மலையிலே அகிகனியின் நடுவிலிருந்து கைக்கொள்ளும்படி கர்த்தர் பண்ணிக்

கொண்ட உடன்படிக்கை என்ன?(5:7-22)

விடை: பத்து கட்டளை.

 

02.கர்த்தரிடத்தில் எவ்வாறு அன்பு கூறும்படி பத்து கட்டளைகளில்

குறிப்பிடப்பட்டுள்ளது?(6:5)

விடை: நீ உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன்

                 முழு ஆத்துமாவோடும், உன் முழு பலத்தோடும் அன்பு கூறுவாயாக

                 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

03.இஸ்ரவேல் ஜனங்கள் தேவனாகிய கர்த்தரைப் பரீட்சை பார்த்தது எந்த

இடத்தில்?(6:16)

விடை: மாசா என்னும் இடத்தில்.

 

04.கர்த்தர் மோசேயிடம் பத்து கட்டளைகளை கொடுத்த போது அமர்ந்திருந்த

இடத்தையும் சூழழையும் விபரியுங்கள்?(5:22)

விடை: கர்த்தர் ஓரேப் மலையிலே அக்கினியிலும் மேகத்திலும் காரிருளிலும்

                  சூழ இருந்தார்.

 

05.சோதோமையும் கொமோராவையும் அழித்தது போல கர்த்தரால் அழிக்கப்பட்ட

இன்னும் இரு நகரங்களை குறிப்பிடுக?(29:23)

விடை: அத்மாவையும் செபோயீமையும்.

 

06.கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கொடுப்பதாக வாக்குத்தத்தம் பண்ணிய தேசத்தை

மோசேக்கு விபரித்துக் கூறியது எவ்வாறு?(32:49)

விடை: எரிகோவுக்கு எதிரான மோவாப் தேசத்திலுள்ள அபாரீம் என்னும்

                  மலைகளிலிருக்கிற நேபோ பர்வதத்தில் ஏறி, நான் இஸ்ரவேல்

                  சந்ததியாருக்குக் காணியாட்சியாகக் கொடுக்கும் கானான் தேசத்தைப்

                  பார் என்று கூறினார்.

 

07.பாகால்பேயோர் என்னும் இடத்தில் நடந்த விசேஷ சம்பவம் என்ன?(4:3)

விடை: பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதரையெல்லாம் தேவனாகிய கர்த்தர்

           அழித்துப் போட்டார்.

 

08.பாகால்பேயோரைப் பின்பற்றின மனிதரையெல்லாம் தேவனாகிய கர்த்தர் அழிக்கும்

போது, கர்த்தரைப் பற்றிக்கொண்ட ஜனங்களுக்கு நடந்தது என்ன?(4:4)

விடை: அவர்களெல்லாரும் இந்நாள் வரைக்கும் உயிரோடிருக்கிறார்.

 

09.மற்றைய ஜாதிகளுக்கு மத்தியில் ஞானமும் விவேகமுமாய் இருக்கும் ஜனங்களாக

இஸ்ரவேல் மக்கள் போற்றப்படுவது என்ன காரணத்தால்?(4:4-6)

விடை: தேவனாகிய கர்த்தர் போதித்த கட்டளைகளையும் நியாயங்களையும்

                   கைகொண்டு நடக்கிற படியால்.

 

 

10.இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்று மற்றைய

ஜாதிகள் இஸ்ரவேல் ஜனங்களை இஸ்ரவேல்  ஜனங்களைக் குறித்து பேசுவது

என்ன காரணத்தால்?(4:4-6)

விடை: தேவனாகிய கர்த்தர் அவர்களுக்கு கற்பித்தபடியே, அவர்கள்

                  கட்டளைகளையும் நியாயங்களையும் கைக்கொண்டபடியால்.

 

11.ஓரேப் மலையிலே கண்கள் கண்ட காரியங்களை மறவாதபடிக்கும், ஜீவனுள்ள

நாளெல்லாம் அவைகள் இருதயத்தை விட்டு நீங்காதபடிக்கும், பிள்ளைகளுக்கும்

பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் அறிவிக்கக்கடவாய் என்று மோசே இஸ்ரவேல்

ஜனங்களுக்கு கூறியது என்ன?(4:9-10)

விடை: தேவனாகிய கர்த்தருக்கு முன்பாக ஓரேப் மலையிலே நின்ற நாட்களைக்

                  குறித்தும், அங்கு கர்த்தரின் வார்த்தைகளை அவர்கள் கேட்கும்படி

                  போதித்த நாட்களைக் குறித்தும்.

 

12.ஓரேப் மலையிலிருந்து தேவனாகிய கர்த்தர் ஜனங்களுடன் பேசும்போது மலைக்கு

நடந்தது என்ன?(4:11)

விடை: அந்த மலையில் வானத்தை அளாவிய அக்கினி எரிய, இருளும் மேகமும்

                 அந்தகாரமும் சூழ்ந்தது.

 

13.தேவனாகிய கர்த்தர் கொடுத்த கட்டளைகள் யாவையும் இஸ்ரவேல் ஜனங்கள்

தங்கள் பிள்ளைகளுக்கும் பிள்ளைகளின் பிள்ளைகளுக்கும் போதித்து அதைக்

குறித்து எந்த சந்தர்ப்பங்களில் பேசும்படி கூறப்படி்டிருக்கிறது?(6:7)

விடை: வீட்டில் உட்காந்திருக்கின்ற போதும், வழியில் நடக்கின்ற போதும்,

                   படுத்துக் கொள்ளுகின்ற போதும், எழுந்திருக்கின்ற போதும்

                  அவைகளைக் குறித்துப் பேசும் படி கூறப்பட்டிருக்கிறது.

 

14.தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்

போது கர்த்தர் ஆணையிட்டபடியே எவ்வித ஜனமாக மாற்றுவார்?(28:9)

விடை: கர்த்தர் தமக்கு பரிசுத்த ஜனமாக நிலைப்படுத்துவார்.

 

15.“கர்த்தருடைய நாமம் உனக்குத் தரிப்பிக்கப்பட்டது என்று பூமியின் ஜனங்களெல்லாம்

கண்டு, உனக்குப் பயப்படுவார்கள்” என்று கூறியதற்கு காரணம் என்ன?(28:9-10)

விடை: கர்த்தரின் கட்டளைகளைக் கைக் கொண்டு, அவர் வழிகளில் நடக்கும்

                 போது, கர்த்தர் உனக்கு ஆணையிட்டபடியே, உன்னைத் தமக்கு பரிசுத்த

                 ஜனமாக நிலைப்படுத்துகின்ற படியால் பயப்படுவார்கள்.

 

16.ஓரேபிலே கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களுடன் செய்து கொண்ட உடன்படிக்கையை

தவிர இன்னுமொரு உடன்படிக்கை செய்து கொண்டதாக வேறு எந்த இடத்தில்

கூறப்படுகிறது?(29:1)

விடை: மோவாபின் தேசத்திலே மோசே மூலமாக இன்னுமொரு உடன்படிக்கை

                   செய்து கொண்டார்.

 

17.இஸ்ரவேல் ஜனங்கள் மோவாப் தேசத்திற்கு வந்த போது அவர்களுடன் யுத்தஞ்

செய்யப் புறப்பட்டு முறியடிக்கப்பட்ட இரு ராஜாக்கள் யார்?(29:7)

விடை: எஸ்போனின் ராஜாவாகிய சீகோனும், பாசானின் ராஜாவாகிய ஓகும்.

 

18.மோசேக்கும் இஸ்ரவேல் ஜனங்களுக்கும் விரோதமாக யுத்தம் செய்யப் புறப்பட்ட

பாசான் எஸ்போன் ராஜாக்களான ஓகும் சீகோனும் கர்த்தருடைய வல்லமையினால்

முறியடிக்கப்பட்டு அவர்களின் தேசங்கள் எந்த இரு கோத்திரங்களுக்கு

கொடுக்கப்பட்டது?(29:8)

விடை: அது ரூபனியருக்கும் காத்தியருக்கும் மனாசேயின் பாதிக்

                  கோத்திரருக்கும் சுதந்திரமாகக் கொடுக்கப்பட்டது.

 

19.தேசத்தின் நிலங்களெல்லாம் விதைப்பும் விளையும் யாதொரு பூண்டின் முளைப்பும்

இல்லாதபடிக்கு, கந்தகத்தாலும் உப்பாலும் எச்சரிக்கப்படக் காரணமாயிருந்தது

என்ன?(29:23-25)

விடை: கர்த்தர் இஸ்ரவேல் ஜனங்களை எகிப்து தேசத்திலிருந்து

                  புறப்படப்பண்ணின போது, அவர்களோடே பண்ணின உடன்படிக்கையை

                 அவர்கள் கடைபிடிக்காததினால்.

 

20.தேவனாகிய கர்த்தர் சிறையிருப்பைத் திருப்பி, இறங்கி, சிதறடித்த எல்லா

ஜனங்களிடத்திலும் இருக்கிற அவர்களை திரும்ப சோ்த்துக் கொண்டு பலுகிப்

பெருகச் செய்வதற்கு காரணமாயிருப்பது என்ன?(30:2,3)

விடை: முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கர்த்தருடைய சத்தத்திற்கு

                  செவி கொடுத்தால் மட்டுமே.

 

21.உபாகமம் 30:11-14 இல் குறிப்பிடப்பட்டிருக்கிற இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய

கட்டளைகளை கைக்கொள்ளும்படி அது அவர்களுக்கு மிகவும் சமீபமாய் இருக்கிறது

என்று குறிப்பிடப்பட்ட இடங்கள் என்ன?

விடை: உன் வாயிலும் உன் இருதயத்திலும் இருக்கிறது.

 

22.கர்த்தர் உன்னை வாலாக்காமல் தலையாக்குவார். நீ கீழாகாமல் மேலாவாய் என்று

கர்த்தர் வாக்குக் கொடுப்பது எப்படிப்பட்டவர்களுக்கு?(28:14)

விடை: தேவனாகிய கர்த்தரின் கட்டளைகளைக் கைக்கொண்டும்

                   அவைகளின்படி நடந்தும்  அவைகளுக்குச் செவி கொடுத்து

                  வருபவர்களுக்கு.

 

 

 

 

 

 

 

 

 

Best Web Design Batticaloa