01 ஆதியாகமம்

January 31st, 2015

01.ஆபிரகாமின் மனைவியின் பெயர் என்ன? (12:5)

விடை: சாராள்

.

02.ஈசாக்கின் இரு மகன்களின் பெயர் என்ன? (25:25,26)

  விடை: யாக்கோபு, ஏசா

.

03.முதிர்வயதாகி பார்வையற்றுப் போன மரண தருவாயில் இருந்த ஈசாக்கு, தன் மகன் ஏசாவிடம் கொண்டுவரும்படி கூறியது எதனை? ஏன் இவ்வாறு கூறினார்? (27:1-4)

விடை:1. காட்டுக்கு போய் வேட்டையாடி ஈசாக்கிற்கு பிரியமான ருசியுள்ள     

                    பதார்த்தங்களை சமைத்து வரும்படி கூறினார்.

               2.  ஈசாக்கு மரணமடைவதற்கு முன் ஏசாவை ஆசிர்வதிக்கும்படி

                    இவ்வாறு கூறினார்.

.

04.தந்தையை ஏமாற்றி ஆசிர்வாதத்தை பெற்றுக் கொள்ள தயங்கிய யாக்கோபு,

யாருடைய வார்த்தைக்கு கட்டுப்பட்டு தந்தையை ஏமாற்றி ஆசிர்வாதத்தைப் பெற்றுக்

கொண்டான்? (27:12)

விடை: தன் தாயான ரெபேக்காளின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு.

.

05.யாக்கோபு தன் தகப்பனை ஏமாற்றி ஆசிர்வாதத்தைப் பெற்றுக் கொள்ள சமைத்துக்

கொடுத்தது எதனை? (27:9-14)

விடை: இரண்டு வெள்ளாட்டுக் குட்டிகள்.

.

06.ஆகாயத்துப் பறவைகளுக்கும் சகல காட்டு மிருகங்களுக்கும் பெயரிட்டது யார்? (2:20)

  விடை: ஆதாம்

.

07.ஆதாம் தேவனுடைய சத்தத்தைக் எங்கேயிருந்து கேட்டான்? (3:10)

விடை: ஏதேன் தோட்டத்திலிருந்து

.

08.“அவர் உன் தலையை நசுக்குவார்” இங்கு அவர் என்று யாரைக் குறித்துக்

கூறப்பட்டது? (3:15)

விடை: இயேசுகிறிஸ்துவைக் குறித்து கூறப்பட்டது.

.

09.ஏவாளுக்கு ஏவாள் என்று பேரிட்டது யார்? (3:20)

விடை: ஆதாம்

.

10.ஆதாமும் ஏவாளும் தேவனுடைய கட்டளையை மீறியிருந்தாலும், தேவன்

அவர்களிடம் அன்பைக் காட்டினார். அதன் அடையாளம் என்ன? (3:21)

விடை: தேவன் தோலினால் உடையை உண்டுபண்ணி உடுத்திவிட்டார்.

.

11.தேவன் உலகத்தைப் படைக்கும் போது இருளிலிருந்து வெளிச்சத்தைப் பிரித்தாரா?

அல்லது வெளிச்சத்திலிருந்து இருளைப் பிரித்தாரா? (1:4)

விடை: வெளிச்சத்தையும் இருளையும் வெவ்வேறாகப் பிரித்தார்

.

12.“நீ மண்ணாயிருக்கிறாய், மண்ணுக்குத் திரும்புவாய்” இது யாரால் யாருக்குக்
கூறப்பட்டது? (3:19)

விடை: கர்த்தரால் ஆதாமுக்குக் கூறப்பட்டது.

.

13.“என் சகோதரனுக்கு நானட காவலாளியோ?” இது யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில்

கூறப்பட்டது? (4:9)

விடை: காயீனால், கர்த்தருக்கு. அவன் சகோதரனாகிய ஆபேலைக்

   கேட்ட போது

.

14.ஆதாமின் வம்சம் வளரும் போது மனுஷருடைய அக்கிரமம் பூமியில் பெருகினது.

அதனால் தேவன் மனஸ்தாபப்பட்டு அவர்களை அழிக்க தீர்மானித்தார். அந்த

காலத்தில் இருந்த நீதிமானும் உத்தமுமான மனிதன் யார்? (6:9)

விடை: நோவா

.

15.நீதிமானும் உத்தமனுமான நோவாவின் 3 மகன்களின் பெயர்கள் என்ன? (6:10)

விடை: சேம், காம், யாப்பேத்

.

16.மாம்சமான யாவரும் பூமியின் மேல் தங்கள் வழியை கெடுத்துக் கொண்டிருக்கும்

போது தேவன் நோவாவிடம் எதைச் செய்யும்படி கூறினார்? (6:14)

விடை: கொப்பேர் மரத்தினால் ஒரு பேழையை உருவாக்கி, அதனுள்

                 அறைகளை உருவாக்கி, அதை உள்ளும் புறம்புமாகக் கீல் பூசும்படி கூறினார்.

.

17.கானானின் தந்தையின் பெயர் என்ன? (9:18)

விடை: காம்

.

18.சாராள் பார்வைக்கு அழகுள்ள ஸ்திரீயாக இருப்பதனால், எகிப்திற்கு சமீபமாக வந்த போது மரணத்திலிருந்து தப்ப ஆபிரகாம் சாராளைப் பார்த்து என்ன யோசனையை கூறினார்? (12:13)

விடை: சாராள் தன் சகோதரி என்று கூறினான்

.

19.கர்த்தர் ஆபிரகாமை நோக்கி தன் தேசத்தையும், இனத்தையும், தன் வீட்டையும்

விட்டு புறப்பட்டு தான் காட்டும் தேசத்திற்கு போகும்படி கர்த்தர் கூறியபோது

ஆபிரகாமின் வயது என்ன? (12:4)

விடை: 75 வயது

.

20.75 வயதான ஆபிரகாம் தன் மனைவி சாராளுடன் தன் தேசத்தை விட்டு

புறப்பட்டபோது அவருடன் வேறு யார் சென்றார்கள்? (12:4)

விடை: சகோதரனின் மகனான லோத்து

.

21.ஆபிரகாமும் சாராளும் ஆபிரகாமின் சகோதரனின் மகனான லோத்துவும் கர்த்தரின்

கட்டளைக்குக் கீழ்படிந்து தங்கள் தேசத்தை விட்டு கர்த்தர் வாக்குத்தத்தம் செய்த

தேசத்திற்கு புறப்பட்டது எந்த தேசத்திலிருந்து? (12:5)

விடை: ஆரான் தேசத்திலிருந்து

 .

22.ஆபிரகாமும் சாராளும் லோத்துவும் ஆரான் தேசத்திலிருந்து புறப்பட்டு எந்த

தேசத்தை அடைந்தார்கள்? (12:5)

விடை: கானான் தேசத்தை அடைந்தார்கள்.

.

23.கர்த்தரின் கட்டளைக்கு கீழ்படிந்து தங்கள் சம்பத்தெல்லாவற்றையும் எடுத்துக்

கொண்டு ஆரானிலே சவதரித்த ஜனங்களையும் கூட்டிக் கொண்டு ஆபிரகாமும்

சாராளும் லோத்துவும் சீகேம் என்னும் இடத்திற்கு சமீபமான மோரே என்னும்

சமபூமிக்கு வந்த பின் என்ன நடந்தது? (12:5-7)

விடை: கர்த்தர் ஆபிரகாமுக்கு தரிசனமாகி: உன் சந்ததிக்கு இந்த தேசத்தைக்

  கொடுப்பேன் என்றார். தனக்குக தரிசனமான கர்த்தருக்கு அங்கு ஒரு பலிபீடத்தை

  ஆபிரகாம் கட்டினார்.

 .

24.தேவன் ஆபிரகாமுக்கு அருளிய ஆசிர்வாதம் யாக்கோபுக்கும் அவன் சந்ததிக்கும்

அருளுவாராக என்று சொல்லி யாக்கோபை ஈசாக்கு வழியனுப்பியது யாரிடம்? (28:4-5)

விடை: பதான் அராமிலிருக்கும் பெத்துவேலின் குமாரன் லாபானிடத்திற்கு

 .

25.பெத்துவேலின் குமாரனும் ரெபேக்காளின் சகோதரனுமான லாபான் எந்த தேசத்தைச்

சேர்ந்தவன்? (28:5)

விடை: சீரியா தேசத்தைச் சேர்ந்தவன்

 .

26.“அவனவன் பணத்தை அவனவன் சாக்கின் வாயிலே போடு” இது யாரால் யாருக்குக்

கூறப்பட்டது? (44:1)

  விடை: யோசேப்பினால், தன் வீட்டு விசாரனைக்காரனுக்கு கூறப்பட்டது.

 .

27.“இளையவனை விட்டு, எப்படி என் தகப்பனிடத்திற்கு போவேன்?” என்று யூதா

கூறினார். இங்கு இளையவன் என்று கூறுவது யாரை? (44:34)

விடை: பென்யமீனை

 .

28.ராகேலின் இரு குமாரர்களின பெர்கள் என்ன? (46:19, 44:27)

விடை: யோசேப்பு, பென்யமீன்

29.“நீங்கள் அல்ல,தேவனே என்னை இவ்விடத்திற்கு அனுப்பினார்.” இது யாரால்

யாருக்குக் கூறப்பட்டது? (45:8)

விடை: யோசேப்பு தன் சகோதரர்களுக்கு கூறப்பட்டது.

 .

30.யோசேப்பு தன் தகப்பனையும் சகோதரரையும் எகிப்தில் எந்த இடத்தில்

குடியேற்றினார்? (47:11)

விடை: எகிப்து தேசத்திலே நல்ல நாடாகிய ராமசேஸ் என்னும் நாட்டிலே

                  குடியேற்றினான்.

 .

31.யோசேப்பு பென்யமீனுக்கு என்ன பொருட்களை கொடுத்தார்? (45:22)

விடை: முன்னூறு வெள்ளிக் காசையும், ஐந்து மாற்று வஸ்திரங்களையும்

                  கொடுத்தார்.

32.யோசேப்பு தன் சகோதரர்களை வழியனுப்பும் போது என்ன கூறினார்? (45:24)

விடை: நிங்கள் போகும் வழியில் சண்டை பண்ணிக் கொள்ளாதிருங்கள்

                  என்று  கூறினார்.

  .        

 33.“எகிப்து தேசம் உனக்கு முன்பாக இருக்கிறது, தேசத்திலுள்ள நல்ல இடத்திலே உன்

தகப்பனையும், உன் சகோதரரையும் குடியேறும்படி செய்” இந்த வார்த்தை யாரால்

யாருக்கு கூறப்பட்டது? (47:6)

விடை: பார்வோன் ராஜா யோசேப்புக்கு கூறியது.

 .

35.ஏதேன் தோட்டத்திலிருந்து ஓடிய ஆறு எத்தனை கிளைகளாகப் பிரிந்து ஓடியது? (2:10)

விடை: நான்கு கிளைகளாகப் பிரிந்து ஓடியது.

 .

36.எத்தியோப்பியா நாடு முழுவதற்கூடாகவும் வளைந்து ஓடிய ஆறு எது? (2:13)

விடை: கீகோன் ஆறு

.

.37.ஆதாமின் எலும்பிலிருந்து உருவாக்கப்பட்டவளுக்கு ‘மனுஷி’ என்று பெயரிடப்பட்டது

ஏன்? (2:23)

விடை: அவள் மனுஷனில் இருந்து எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்று

                  பெயரிடப்பட்டது.

 .

38.தேவன் ஜீவ விருட்சத்திற்கு போகும் வழியை எவ்வாறு காவல் காத்தார்? (3:24)

விடை: ஏதேன் தோட்டத்தின் கிழக்குப் பக்கமாக கேரூபீன்களையும், வீசிக்

                  கொண்டிருக்கிற சுடரொளி பட்டயத்தையும் வைத்தார்.

 

.

39.தேவன் உலகைப் படைக்கும் போது ஜலத்தின் மேல் அசைவாடிக் கொண்டிருநதது

யார்? (1:2)

விடை: தேவ ஆவியானவர்

 .

40.“ஏவாள்” என்னும் பெயரின் அர்த்தம் என்ன? (3:20)

விடை: ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்

 .

41.காயீனைக் கொல்பவருக்கு கொடுக்கும் தண்டனை என்ன என்று கர்த்தர் கூறினார்?

(4:15)

விடை: காயீனைக் கொல்கிற எவன் மேலும் ஏழு பழி சுமரும் என்று கூறினார்.

 .

42.“நீ நிலத்தைப் பயிரிடும்  போது அது தன் பலனை இனி உனக்குக் கொடாது, நீ

பூமியில் நிலையற்று அலைகிறவனாய் இருப்பாய்” இங்கு குறிப்பிடப்படுவது யாரை?

(4:12)

விடை: காயீனை

43.காயீன் கட்டிய பட்டணம் என்ன? (4:17)

விடை: ஏனோக்

 .

44.ஆபேலின் மரணத்தின் பின், அவனுக்குப் பதிலாக ஆதாம் பெற்ற பிள்ளையின் பெயர்

என்ன? (4:25)

விடை: சேத்

 .

45.’யாவே’ அல்லது கர்த்தரின் பெயரைக் கூப்பிட்டு முதன் முதலாக மக்கள் வழிபட

ஆரம்பித்தது யாருடைய காலத்தில்? (4:26)

விடை: சேத்தின் மகன் ஏனோஸின் காலத்தில்

 .

46.பூமியில் நிம்மதியின்றி அலைந்து திரிகிறவன் காயீன் என்பதை மற்றவர்கள் எவ்வாறு

கண்டு கொண்டனர்? (4:15)

விடை: தேவன் அவன் மேல் ஓர் அடையாளத்தை வைத்ததினால் கண்டு

  கொண்டனர்.

47.நோவாவின் தகப்பனின் பெயுர் என்ன? (5:28)

விடை: லாமேக்கு.

 

 

48.கர்த்தர் நோவாவுக்கு செய்யும்படி கூறிய பேழையின் அமைப்பு என்ன?(6:15,16)

விடை: நீளம் முந்நூறு முழமாகவும், அகலம் ஐம்பது முழமாகவும் இருக்க

           வேண்டும்.  மேலும் ஒரு ஜன்னலை உண்டுபண்ணி பேழையின் மேல்

           தட்டிலிருந்து ஒரு முழ உயரத்தினால் அதற்கு ஒரு கூரையை செய்து

           பேழையின் ஒரு பக்கத்தில் கதவு ஒன்றை வைத்து பேழையின் கீழ்

           அறைகளையும் இரண்டாம் தட்டில் அறைகளையும், மூன்றாம் தட்டின்

           அறைகளையும் அமைக்க வேண்டும்.

 

49.கர்த்தர் கூறியபடி நோவா பேழையை அமைத்த பின் நோவா அவரது குடும்பத்துடன்

பேழைக்குள் செல்லும் போது தன்னிடத்தில் சேர்த்துக் கொள்ளும்படி கர்த்தர்

கூறியது எவற்றை?(7:2-4)

விடை:1.பூமி முழுவதிலும் அவைகளின் பல்வேறு வகையான இனங்கள்

                    தொடர்ந்தும் உயிர் வாழும் படி,

                 2.சுத்தமான சகல மிருகங்களிலும் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு

                    சோடிகளையும்,

                 3.சுத்தமில்லாத மிருகங்களையும் ஆணும் பெண்ணுமாக ஒவ்வொரு

                    சோடிகளையும்,

                 4.ஆகாயத்து பறவைகளிலும் சேவலும் பேடுமாக எவ்வேழு

                     சோடிகளையும் தன்னிடத்தில் சேர்த்துக் கொள்ளும்படி கர்த்தர் கூறினார்.

 

50.நோவா அவர் குடும்பத்தார், மற்றும் சோடிகளான காட்டு, வீட்டு மிருகங்கள்,

பறவைகள் அனைத்தும் பேழைக்குள் இருந்த போது, கர்த்தர் பூமியை

பெருமழையினால் அழித்தார். மழை வெள்ளம் பூமியின் மேல் எத்தனை நாட்களின்

பின் வற்றத் தொடங்கியது?(8:3)

விடை: நூற்றைம்பது நாட்களின் பின் தண்ணீர் மட்டம் குறைந்தது.

 

52.ஜலப்பிரளயத்தினால் கர்த்தர் பூமியை அழித்தபின் ஏழாம் மாதம் பதினேழாம்

நாள் நோவாவும் அவர் குடும்பத்தாரும் இருந்த பேழையை எந்த மலையின் மேல்

தங்கும்படி செய்தார்?(8:4)

விடை: “அரராத்” என்னும் மலையின் மேல்.

 

53.ஜலப்பிரளயத்தின் பின் கர்த்தர் மனுஷனோடும், மனுஷனோடு இருக்கும் எல்லா

உயிரினங்களோடும், வரப்போகும் எல்லாச் சந்ததிக்குமாக ஏற்படுத்திய

உடன்படிக்கையின் அடையாளம் என்ன? (9:13)

விடை: வானவில்

 

54.பூமியின் மேல் ஜலப்பிரளயம் உண்டான போது நோவாவின் வயது என்ன? (7:6)

விடை: 600

 

55.40 நாட்களாக பூமியின் மேல் வெள்ளம் அதிகமாய் பெருகியதால் வானத்தின்

கீழுள்ள உயர்ந்த மலைகளெல்லாம் மூடப்பட்டன. வெள்ளம் மலைகளுக்கு மேலாக

எவ்வளவு உயர்ந்தது? (7:20)

  விடை: 15 முழத்திற்கு மேல்

 

56.ஜலப்பிரளயத்தின் பின் வெள்ளம் வற்றியதா என்று பார்க்கும்படி நோவா பேழையின்

ஜன்னலைத் திறந்து வெளியே அனுப்பிய பறவைகளில் எந்த பறவையினூடாக

உண்மையை அறிந்து கொண்டான்? (8:10,11)

  விடை: புறா மூலமாக

 

57.ஜலப்பிரளயம் உண்டாவதற்கு எத்தனை நாட்களுக்கு முன் நோவாவும் அவர்

குடும்பத்தாரும் மற்றைய மிருக ஜீவராசிகளுடன் பேழைக்குள் சென்றனர்? (7:10)

விடை: ஏழு நாட்களுக்கு முன்.

 

58.நோவா மரிக்கும் போது அவரின் வயது என்ன? (9:29)

விடை: 350 வருடங்கள்.

 

59.ஜலப்பிரளயத்தினால் பூமி அழிக்கப்பட்டதின் பின் யார் மூலமாக பூமியெங்கும்

மக்கள் பரப்பினார்கள்? (9:19)

  விடை: நோவாவின் மகன்களான சேம், காம், யாப்பேத்.

 

60.ஈசாக்கு யாக்கோபை பெண் கொள்ளும்படி லாபானிடத்திற்கு அனுப்பினார். அந்த

லாபான் யார்?(28:2-5)

  விடை: யாக்கோபு, ஏசா ஆகியோரின் தாயாகிய ரெபேக்காளின் சகோதரன். சீரியா

          தேசத்தான்.

 

61.யாக்கோபு சென்று கொண்டிருந்த போது, இரவு நேரமானதால் இடையில் நித்திரை

செய்த போது ஓர் ஏணியில் தேவ தூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தததை

கனவு கண்டான். இதைக் கண்டு நித்திரை விட்டெழுந்த யாக்கோபு என்ன

கூறினான்?(28:10-17)

விடை: “மெய்யாகவே கர்த்தர் இந்த ஸ்தலத்தில் இருக்கிறார், இதை நான்

           அறியாதிருந்தேன். இந்த ஸ்தலம் எவ்வளவு பயங்கரமாயிருக்கிறது! இது

           தேவனுடைய வீடேயல்லாமல் வேறல்ல, இது வானத்தின் வாசல்”

           என்றான்.

 

62.யாக்கோபு ஆரான் நோக்கி போய்க் கொண்டிருக்கையில், சூரியன் மறைந்து

விட்டதால் இரவு அந்த இடத்திலே கற்களில் ஒன்றை எடுத்துத் தலையின் கீழ்

வைத்து நித்திரை செய்து கனவு கண்டான். மறுநாள் தலையின் கீழ் வைத்திருந்த

கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தி, அதன் மேல் எண்ணெய் ஊற்றி

அவ்விடத்திற்கு என்ன பெயரிட்டான்?(28:19)

விடை: அவ்விடத்திற்கு பெத்தேல் என்று பேரிட்டான். அதன் அர்த்தம்

                   தேவனுடைய வீடு என்பதாகும்.

 

63.யாக்கோபு ஆரான் நோக்கி போய்க் கொண்டிருக்கையில் கனவு கண்ட இடத்திற்கு

பெத்தேல் என்று பெயரிடுவதற்கு முன் அது என்ன பெயரால் அழைக்கப்பட்டது?(28:19)

விடை: முன்பு “லூஸ்” என அழைக்கப்பட்டது.

 

64.யாக்கோபு சென்று கொண்டிருந்த போது, இரவு நேரமானதால் இடையில் நித்திரை

செய்த போது ஓர் ஏணி பூமியிலிருந்து வானத்தை தொட்டுக் கொண்டிருப்பதாக

கனவு கண்டான். அதில் தேவ தூதர்கள் ஏறுவதும் இறங்குவதுமாய் இருந்தார்கள்.

  கர்த்தர் அதற்கு மேலாக நின்று கூறியது என்ன?(28:13)

விடை: கர்த்தர் யாக்கோபுக்கு கூறியது:

                   1.உன் தகப்பன் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனுமாகிய கர்த்தர்

                      நானே என்றும்,

                   2.யாக்கோபு படுத்திருக்கிற பூமியை அவனுக்கும் அவன் சந்ததிக்கும்

                     தருவேன் என்றும்,

                  3.யாக்கோபின் சந்ததி பூமியின் தூளைப் போல்பெருவார்கள். அவர்கள்

                   மூலமாக பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் ஆசிர்வதிக்கப்படும் என்றும்

                   கூறினார்.

65.யாக்கோபு கனவு கண்ட இடத்திற்கு பெத்தேல் என்று பெயரிட்டு கர்த்தருக்கு ஒரு

பொருத்தனை செய்து அன்பைக் காட்டி அதன் பிரதிபலிப்பாக கர்த்தருக்கு எதைக்

கொடுப்பதாக கூறினார்?(28:22)

விடை: கர்த்தர் யாக்கோபுக்கு கொடுக்கும் எல்லாவற்றிலும் பத்திலொன்றை

                  தசமபாகமாக கொடுப்பதாக கூறினார்.

 

66.ஆரான் தேசத்துக்கு வந்த யாக்கோபு, மேய்ப்பர்கள் மந்தைகளுக்கு தண்ணீர்

கொடுக்கும் இடத்திற்கு வந்ததும் சந்தித்த “ராகேல்” யார்?(29:4-6)

விடை: நாகோரின் குமாரனாகிய லாபானின் குமாரத்தி.

 

67.யாக்கோபு லாபானைத் தேடி செல்லும் போது ஆரான் தேசத்திற்கு வந்ததும்

மேய்ப்பர்கள் யாக்கோபுக்கு அறிமுகம் செய்து வைத்தது யாரை? (29:6)

விடை: ராகேலை.

 

68.யாக்கோபு லேயாளை திருமணம் முடித்த பின் லோயாளின் வீட்டு பணிப்பெண்ணாக

இருக்க லாபான் கொடுத்த பெண்ணின் பெயர் என்ன? (29:24)

விடை: சில்பாள்.

 

69.யாக்கோபு ராகேலை திருமணம் முடித்த பின் கிடைத்த ராகேலின் பணிப்பெண்ணின்

பெயர் என்ன? (29:29)

விடை: பில்காள்.

 

70.லேயாள் தான் பெற்ற மகனுக்கு “ரூபன்” என்று பெயரிட்டது ஏன்(29:32)

விடை: “கர்த்தர் என் சிறுமையை பார்த்தருளினார்” என்று சொல்லி அவனுக்கு

                  ரூபன் என்று பெயரிட்டான்.

 

71.லேயாள் பெற்ற இரண்டாவது மகனுக்கு என்ன பெயர் வைத்தனர்? அதன் அர்த்தம்

என்ன?(29:33)

விடை: 1.சிமியோன்

                   2.“நான் அர்ப்பமாய் எண்ணப்பட்டதைக் கர்த்தர் கேட்டருளி, இவனையும்

                    எனக்குத் தந்தார்” என்று அர்த்தம்.

 

72.“எனக்குப் பிள்ளையைக் கொடும், இல்லாவிட்டால் நான் சாகிறேன்” இது யாரால்

யாருக்கு சொல்லப்பட்டது?(30:1)

விடை: ராகேல், தான் பிள்ளைகள் பெறாததினால், தன் சகோதரியின் மேல்

  பொறாமை கொண்டு, யாக்கோபு இவ்வாறு கூறினாள்.

 

73.ராகேலுக்கு யாக்கோபு மூலமாக பிள்ளைகள் பெறாததினால் தன் பணிப்பெண்ணை

யாக்கோபுக்கு மனைவியாக கொடுத்து அவள் மூலமாக பெற்ற பிள்ளைகளுக்கு

வைத்த பெயர் என்ன? அதன் அர்த்தம் என்ன? (30:5-6)

விடை: 1.அவனுக்கு “தாண்” என்று பேரிட்டான்.

                   2.“தேவன் என் வழக்கைத் தீாத்து, என் சத்தத்தைக் கேட்டு, எனக்கு ஒரு

                        குமாரனைக் கொடுத்தார் என்று அர்த்தம்

 

74.ராகேலின் பணிப்பெண்ணான பில்காள் மூலமாக பெற்ற இரண்டாவது பிள்ளைக்கு

“நப்தலி” என்று பெயரிட்ட போது ராகேல் கூறியது என்ன?(30:7-8)

விடை: “நான் மகா போராட்டமாய் என் சகோதரியோடே போராடி

                    மேற்கொண்டேன்” என்று கூறினாள்.

 

75.லேயாளின் வேலைக்காரியாகிய சில்பாள் யாக்கோபுக்கு பெற்ற இரண்டாவது

குமாரனுக்கு “ஆசேர்” என்று ஏன் பெயரிட்டாள்? (30:13)

விடை: நான் பாக்கியவதி, ஸ்திரீகள் என்னைப் பாக்கியவதி என்பார்கள்”

  என்பதனால்.

 

76.“நான் என் வேலைக்காரியை என் புருஷனுக்கு கொடுத்த பலனைத் தேவன் எனக்குத்

தந்தார்“ என்ற அர்த்தமுடைய பெயரை லேயாள் யாக்கோபுக்கு பெற்ற ஐந்தாம்

குமாரனுக்கு வைத்தாள். அந்த பெயர் என்ன?(30:16-18)

விடை: “இசக்கார்”

 

77.பதான் அராமிலே யாக்கோபு சம்பாதித்த மிருக ஜீவன்களாகிய மந்தைகள்

அனைத்தையும் தன் பொருள்கள் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு கானான்

தேசத்திற்கு செல்ல ஆயத்தமாகும் போது ராகேல் தன் தகப்பனிடத்திலிருந்து எதை

திருடினாள்?(31:18-19)

விடை: சுரூபங்களை திருடினாள்.

 

78.யாக்கோபு ஏசாவினிடத்திற்குச் செல்லும் போது கர்த்தருடைய தூதரைச் சந்தித்ததின்

பின்னர் அவ்விடத்திடத்திற்கு வைத்த பெயர் என்ன? அதன் அர்த்தம் என்ன? (32:2)

விடை: 1.மக்னாயீம்

                   2.தேவனுடைய சேனை.

 

79.யாக்கோபு பதான் அராமிலிருந்து மறுபடியும் வந்து எங்கே கூடாரம் அமைத்தான்

என கூறப்படுகிறது?(33:18)

விடை: கானான் தேசத்திலிருக்கிற சாலோம் என்னும் சீகேமுடைய

                  பட்டணத்திற்கு அருகே சென்று பட்டணத்திற்கு எதிரே கூடாரம்

                 போட்டான்.

 

80.யாக்கோபு சீகேம் பட்டணத்திற்கு அருகே சென்று கூடாரம் அமைத்த நிலத்தை

யாரிடத்தில் வாங்கினான்? எவ்வளவு பணத்திற்கு?(33:19)

விடை: 1.ஏமோரின் புத்திரரிடத்தில்.

                   2.நூறு வெள்ளிக் காசுக்கு.

   

 

 

 

 

 

Best Web Design Batticaloa