02 யாத்திராகமம்

February 11th, 2015

 

01.மோசே மூலமாக பார்வோன் அரசனுக்கும் மக்களுக்கும் எதிராக கொண்டு வரப்பட்ட

எட்டாவது வாதை என்ன?(10:4)

விடை: வெட்டுக்கிளிகளின் வாதை

 

02.மோசே மூலமாக எகிப்து தேசமெங்கும் வெட்டுக்கிளிகள் நாட்டின் மேற்பரப்பு

முழுவதையும் மூடி நிலம் கருமையானதால் பார்வோன் மனமிரங்கி தன் தவறை

உணர்ந்து அந்த வாதையை அகற்றும்படி கூறியபின் மோசே என்ன செய்ததாக

யாத்திராகமம் புத்தகத்தில் எழுதப்பட்டருக்கிறது?(10:18)

விடை: மோசே பார்வோனை விட்டுப் போய், கர்த்தரிடம் மன்றாடினான்.

 

03.எகிப்து தேசத்தை ஆண்ட ராஜா யார்?(14:4)

விடை: பார்வோன் ராஜா.

 

04.இஸ்ரவேல் மக்களை தொடர்ந்து வந்த பார்வோனின் சேனைக்கு என்ன

நடந்தது?(14:28)

விடை: செங்கடல் தண்ணீர் திரும்பி வந்து, பார்வோனின் முழுப்படையையும்

                  கடலுக்குள் மூடிவிட்டது.

 

05.வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு செல்லும் வழியில் இஸ்ரவேல்

மக்களுக்கு வனாந்திரத்தில் கொடுக்கப்பட்ட ஆகாரம், மற்றும் பானங்கள் 3ஐ

குறிப்பிடுக?

விடை: மன்னா(16:31), காடைப் பறவைகளின் இறைச்சி(16:13), தண்ணீர்(15:25)

 

06.பஸ்கா பண்டிகைக்காக ஒவ்வொரு குடும்பத் தலைவனும் வீட்டுக்கு ஒரு

 ஆட்டுக்குட்டியை மாதத்தில் எந்த நாளில் தெரிந்தெடுக்க வேண்டும் என

யாத்திராகமம் புத்தகம் கூறுகிறது?(12:3)

விடை: முதலாம் மாதத்தின் பத்தாம் நாளில்.

 

07.பஸ்கா பண்டிகைக்காக ஒவ்வொரு குடும்பத் தலைவனும் தெரிந்தெடுக்க வேண்டிய

ஆட்டுக்குட்டி எத்தனை வயதாயிருக்க வேண்டும்?(12:5)

விடை: ஒரு வயதுடைய, பழுதற்ற கடாக்களாக இருக்க வேண்டும்.

 

08.ஆரோனின் சகோதரியின் பெயர் என்ன?(15:20)

விடை: மிரியாம்.

 

09.ஏலிமுக்கும் சீனாய்க்கும் இடையேயுள்ள சீன் வனாந்திரத்தை வந்தடைந்த போது,

வனாந்திரத்திலே தங்களுக்கு உண்ண ஆகாரம் இல்லாததினால் முழு இஸ்ரவேல்

சமூகமும் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக எவ்வளவு

முறுமுறுத்தார்கள்?(16:1-3)

விடை: நாங்கள் கர்த்தரின் கையாலே எகிப்திலே இறந்திருக்கலாமே. நாங்களோ

                அங்கே இறைச்சிப் பானைகளைச் சுற்றி உட்கார்ந்து விரும்பிய

                உணவையெல்லாம் சாப்பிட்டோம்.  ஆனால் நீங்களோ இந்த முழு மக்கள்

                கூட்டமும் பட்டினியாய்ச் சாகும்படி இந்த வனாந்திரத்திற்குள் எங்களைக்

                கொண்டு வந்திருக்கிறீர்கள் என்றார்கள்.

 

10.இஸ்ரவேல் சமூகம் வனாந்திரத்திலே ஆகாரம் இல்லாமல் முறுமுறுத்த போது

அவர்கள் தன் கட்டளைக்கு கீழ்படிகிறார்களா என்று அறிய மோசே மூலம் கர்த்தர்

கட்டளையிட்டது என்ன?(16:4-5)

விடை: “நான் உங்களுக்கு வனாந்திரத்திலிருந்து அப்பம் வருஷிக்கபண்ணுவேன்.

                    ஜனங்கள் போய் ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு

                    நாளிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதினால் அவர்கள் என்

                    நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ என்று அவர்களைச்

                   சோதிப்பேன் ” என்றார்.

 

11.சீன் வனாந்திரத்தில் ஆகாரம் இல்லாமலிருந்த இஸ்ரவேல் சமூகம் கர்த்தருடைய

கட்டளைக்கு கீழ்படியாமல் தேவைக்கு அதிகமாக ஆகாரம் சேர்த்த போது அந்த

ஆகாரத்திற்கு என்ன நடந்தது?(16:20)

  விடை: அது பூச்சி பிடித்து நாற்றமடைந்தது.

 

12.இஸ்ரவேல் சமூகத்திற்கு காத்தர் வனாந்திரத்திலே கொடுத்த ஆகாரத்தை தேவைக்கு

அதிகமாக சேர்த்தபோது அது பூச்சிபிடித்து நாற்றமெடுத்தது. ஆனாலும் ஆறாம்

நாளிலே 7ம் நாளுக்காகவும் சேர்த்த கோரம் பழுதடையாதது ஏன்?(16:23-24)

விடை: கர்த்தருடைய கட்டளைப்படி ஏழாம் நாள் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாக

                இருந்தபடியாலும், தன்னுடைய கட்டளையை நிறைவேற்றுவது

                கா்த்தருக்கு அவசியமானதாக இருந்தபடியால் ஆகாரம் பழுதடையாமல்

                இருந்தது.

 

13.யோசுவா அமலேக்கிய படையை மேற்கொள்ளும் போது மோசேயின் கைகள்

எவ்வளவு நேரம் ஒரே நிலையாயிருந்தது?(17:12)

விடை: சூரியன் அஸ்தமிக்கும் வரை ஒரே நிலையாயிருந்தது.

 

14.மோசேயின் இரு மகன்களின் பெயர்கள் என்ன? அவற்றின் அர்த்தம் என்ன? (18:3-4)

விடை: கெர்சோம் – அந்நிய தேசத்திலே பரதேசியானேன்.

                 எலியேசர் – என் பிதாவின் தேவன் எனக்குத் துணை நின்று

                                             பார்வோனின்  பட்டயத்திற்கு என்னைத் தப்புவித்தார்.

 

15.எகிப்து தேசத்து அடிமைத்தனத்திலிருந்து வெளியேறிய இஸ்ரவேல் புத்திரர்

எத்தனை வருடங்கள் மன்னாவை சாப்பிட்டார்கள்?(16:35)

விடை: இஸ்ரவேல் புத்திரர் குடியிருப்பான தேசத்திற்கு வருமட்டும் நாற்பது

                  வருடமாக மன்னாவையே சாப்பிட்டார்கள்.

 

16.இஸ்ரவேல் புத்திரர் ரெவிதீம் என்னும் இடத்திற்கு வந்து முகாமிட்ட போது அங்கே

அவர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காததினால் அவர்கள் மோசேக்கு

விரோதமாய் முறுமுறுத்தார்கள். அப்போது மோசே யாரிடம் சென்று ஆறுதல்

தேடினார்?(17:4)

விடை: மோசே கர்த்தரிடம் சென்று ஆறுதல் தேடினான்.

 

17.யோசுவா அமலேக்கியருடன் போரிடும் போது மோசே, யாருடன் எங்கே போனார்?

(17:10)

விடை: மோசே ஆரோனுடனும் ஊர் என்பவனுடனும் மலையுச்சிக்குப் போனார்.

 

18.ரெவிதீம் என்னும் இடத்தில் யோசுவா அமலேக்கியருடன் போரிடும் போது,

மோசேயும் ஆரோனும் ஊர் என்பவனும் மலையுச்சிக்குப் போய் ஜனங்களுக்காக

என்ன செய்தார்கள்? (17:10-11)

விடை: மோசே தன் கைகளை உயர்த்திக கொண்டிருக்க, ஆரோனும் ஊரும் ஒரு

                   பக்கம் ஒருவனும் மறுபக்கம் மற்றவனுமாக அவருடைய கைகளை

                  உயர்த்தித் தாங்கிப் பிடித்துக் கொண்டார்கள். அப்போது இஸ்ரவேலர்

                  வென்றார்கள்.

 

19.மோசேயின் மனைவியின் பெயர் என்ன?(18:2)

விடை: சிப்போராள்.

 

20.மோசேயின் மாமாவின் பெயர் என்ன? (18:5)

விடை: எத்திரோ.

 

21.எக்காள சத்தம் தொனிக்க சீனாய் மலை உச்சிக்கு சென்ற மோசேயிடம் கர்த்தர்

மலை உச்சிக்கு யாரை அழைத்து வரும்படி அழைத்தார்? (19:24)

விடை: ஆரோனை.

 

22.வருடத்தில் மூன்று முறை கொண்டாடும்படி கர்த்தர் கூறிய பண்டிகைகள் என்ன?

(23:15-17)

விடை: 1.புளிப்பில்லா அப்பப்பண்டிகை.

                   2.வயலின் விளைச்சலின் முதற்பலனைக் கொண்டு அறுவடைப்

                     பண்டிகை.

                   3.வருஷ முடிவிலே வயலின் விளைச்சலைச் சேர்க்கிற சேர்ப்புக்கால

                    பண்டிகை.

 

23.“நீர் சொன்னது சரி, இனி நான் உம்முடைய முகத்தை காண்பதில்லை. இது யாரால்

யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது?(10:29)

விடை: மூன்று நாட்கள் முழுமையாக இருள் எகிப்து முழுவதையும் மூடிய

                  வாதை நீங்கி பார்வோன் மோசேயிடம் தன் முகத்தைப் பார்க்கும் நாளில்

                  சாவாய் என்று கூறிய போது மோசே பார்வோனிடம் கூறியது.

 

24.காத்தர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு எகிப்து ஜனங்களிடமிருந்து தயவு கிடைக்கும் படி

செய்தது எப்படி என யாத்திராகமம் புத்தகம்  கூறுகிறது?(11:2)

விடை: ஆண்களும், பெண்களும் வேறுபாடின்றி தங்களுடைய

                  அயலவர்களிடத்தில் பொன்னுடமைகளையும், வெள்ளியுடமைகளையும்

                  கேட்டு கூறப்பட்டுள்ளது.

 

25.எகிப்து நாட்டிலிருந்து இஸ்ரவேல் ஜனங்களைத் தொடர்ந்து எத்தனை யுத்த தேர்கள்

சென்றது?(14:7)

விடை: பிரதானமான அறுநூறு இரதங்களும், எகிப்திலுள்ள சகல இரதங்களும்.

 

26.வனாந்திரத்தில் நடந்து சென்ற சமயத்தில், ஒரு இடத்திற்கு மாறா என்ற பெயரை

வைத்தார்கள். அவிவடத்திற்கு அந்தப் பெயர் வரக் காரணம் என்ன?(15:25)

விடை: அவிவிடத்திலிருந்த தண்ணீர் கசப்பாயிருந்த காரணத்தினால்.

 

27.வாக்குத்தத்தம் பண்ணின தேசத்திற்கு சென்று கொண்டிருந்த போது மோசே மாரா

என்னும் இடத்தில் கசப்பான தண்ணீரை மதுரமான தண்ணீராக மாற்றியது எப்படி?

(15:25)

விடை: மோசே கர்த்தர் காட்டிய ஒரு மரத் துண்டை தண்ணீருக்குள்

                   போட்டதினால்.

 

28.வாக்குத்தத்தம் பண்ணிய தேசத்திற்கு செல்லும் பயணத்தில் இஸ்ரவேல்

ஜனங்களுக்கு பன்னிரெண்டு நீரூற்றுக்களும் எழுபது பேரீச்ச மரங்களும் கிடைத்தது

எங்கே?(15:27)

விடை: ஏலிம் என்னும் பிரதேசத்தில்.

 

29.முழு இஸ்ரவேல் சமூகமும் எகிப்திலிருந்து விடுதலை பெற்று வெளியேறிய பின்

இரண்டாம் மாதம் பதினைந்தாம் நாள் எந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார்கள்? (16:1)

விடை: ஏலிமுக்கும் சீனாய்க்கும் இடையேயுள்ள சீன் வனாந்திரத்தை

                  வந்தடைந்தார்கள்

 

30.சீன் வனாந்திரத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கிடைத்த மன்னா என்னும்

ஆகாரத்தை பற்றி கூறுங்கள்?(16:31-34)

விடை: அது கொத்துமல்லி அளவாயும் வெண்மை நிறமாயும் இருந்தது. அதன்

                   ருசி தேனிட்ட பணிகாரத்திற்கு ஒப்பாயிருந்தது.

 

31.எகிப்து தேசத்தின் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற்று செல்லும் சமயத்தில்

வனாந்திரத்தில் இஸ்ரவேல் ஜனங்களுக்கு கிடைத்த ஆகாரம் வரப்போகும்

தலைமுறையினர் காணும்படி என்ன செய்யப்பட்டது?(16:33)

விடை: ஒரு கலசத்தில் ஒரு ஓமர் அளவு மன்னாவை போட்டு சாட்சிப்

                  பெட்டகத்தின் முன்பாக வைக்கப்பட்டது.

 

32.இஸ்ரவேல் ஜனங்கள் சீன் வனாந்திரத்திலிருந்து வெளியேறி கர்த்தரின்

கட்டளைப்படி முகாமிட்ட இடத்தின் பெயர் என்ன? ஆனாலும் அங்கு அவர்களுக்கு

வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒரு பொருள் கிடைக்கவில்லை. அது என்ன?

(17:7)

விடை: 1.ரெவிதீம் என்னும் இடம்.

                   2.அங்கு அவர்களுக்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்கவில்லை.

 

33.ரெவிதீம் என்னும் இடத்திற்கு இஸ்ரவேல் ஜனங்கள் “மாசா” என்றும் “மேரிபா”

என்றும் ஏன் பேரிட்டார்கள்?(17:7)

விடை: இஸ்ரவேல் புத்திரர் வாதாடினதினிமித்தமும், கர்த்தர் எங்கள் நடுவில்

                  இருக்கிறாரா இல்லையா என்று அவர்கள் கர்த்தரை பரீட்சை

                   பார்த்ததினிமித்தமும், மோசே அவ்வாறு பெயரிட்டார்.

 

34.ரெவிதீம் என்னும் இடத்தில் இஸ்ரவேல் ஜனங்களைத் தாக்கியது யார்?(17:8)

விடை: அமலேக்கியர்.

 

35.இஸ்ரவேல் ஜனங்கள் இத்தாக்குதலை நடத்தும்படி மோசே அதிகாரத்தைக்

கொடுத்தது யாருக்கு?(17:9)

விடை: யோசுவாவுக்கு.

 

36.கர்த்தரை சந்திக்க மோசே சீனாய் மலைக்கு ஏறிப் போன போ, இஸ்ரவேல்

ஜனங்கள் மேல் தான் காட்டும் பாதுகாப்பை வெளிப்படுத்தி, தன் வாக்கைக் கேட்டு,

தன் உடன்படிக்கையை கைக்கொண்டால் தனக்கும் அவர்களுக்கும் உள்ள உறவு

எப்படிப்பட்டது என்று கர்த்தர் கூறினார்?(19:5,6)

விடை: 1.சகல ஜனங்களிலும் அவர்களே கர்த்தருக்குச் சொந்த

                   சம்பத்தாயிருப்பார்கள்.

                  2.அவர்கள் கர்த்தருக்கு ஆசாரிய ராஜ்யமாய் இருப்பார்கள்.

                   3.பரிசுத்த ஜாதியாயுமிருப்பார்கள்.

 

37.கர்த்தர் மோசேயுடன் பேசும் போது இடிமுழக்கங்களையும் மின்னல்களையும்

எக்காள சத்தத்தையும் மலை புகைகிறதையும் கண்ட இஸ்ரவேல் ஜனங்கள்

பயத்தினாலே தூரத்திலே நின்று மோசேயை நோக்கி என்ன கூறினார்கள்?(20:19)

விடை: நீா எங்களோடே பேசும், நாங்கள் கேட்போம். தேவன் எங்களோடே

                 பேசாதிருப்பாராக. பேசினால் நாங்கள் செத்துப் போவோம் என்றார்கள்.

 

38.கொடூர செயலாக, ஒருவன் பிறனுக்கு விரோதமாய் சதிமோசஞ் செய்து, அவனைத்

துணிகரமாய் கொன்று போட்டால்,அவனுக்குச் செய்ய வேண்டியது என்னவென்று

யாத்திராகமம் புத்தகத்தில் கூறப்பட்டடிருக்கிறது?(21:14)

விடை: அவனை கர்த்தரின் பலிபீடத்திலிருந்து பிடித்துக் கொண்டு போய்

                   கொலை செய்யப்பட் வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது.

 

39.யாத்திராகமம் புத்தகத்தில் கொடூர செயலாக கருதப்படும் தன் தகப்பனையாவது தன்

தாயையாவது அடிக்கிறவனக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட வேண்டுமென்று

கூறப்பட்டிருக்கிறது?(21:15)

விடை: அவன் நிச்சயமாய் கொலை செய்யப்படக்கடவன் என்று

           கூறப்பட்டிருக்கிறது.

 

40.இஸ்ரவேல் ஜனங்கள் சத்தியத்தை அறிவிக்கும் போதும், நீதியைச் செய்யும் போதும்

என்ன செய்யப்பட வேண்டும் என்று மோசே கூறுகிறார்?(23:1-3)

விடை:1.அபாண்டமான சொல்லை ஏற்றுக்கொள்ளாயாக. கொடுமையுள்ள

                சாட்சிக்காரானாயிருக்க ஆகாதவனோடே கலவாயாக.

               2.தீமை செய்ய திரளான பேர்களை பின்பற்றாதிருப்பாயாக.

               3.வழக்கிலே நியாயத்தை புரட்ட மிகுதியானவர்களின் பட்சத்தில் சாய்ந்து,

                  உத்தரவு  சொல்லாதிருப்பாயாக.

               4.வியாச்சியத்திலே தரித்திரனுடைய முகத்தை பாராயாக.

 

41.யாத்திராகமம் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற படி ஆறுவருஷம் நிலத்தில் பயிரிட்டு,

அதின் பலனைச் சேர்த்துக் கொள்ள ஏழாம் வருஷத்தில் அந்த நிலத்தை சும்மா

கிடக்க விட்டுவிடு என்று கர்த்தர் எதற்காக கூறினார்?(23:11)

விடை: ஜனத்திலுள்ள எளியவர்கள் புசிக்கவும், மீதியானதை வெளியின்

                   ஜெந்துக்கள் தின்னவும், அந்த நிலம் சும்மா கிடக்க விட்டுவிடு என்று

                   கூறினார்.

 

42.ரெவிதீம் என்னும் இடத்தில் யோசுவா அமலேக்கியரை முறியடித்து வந்த பின்

மோசே ஒரு பலிபீடத்தைக் கட்டி, அதற்கு யெகோவாநிசி என்று பெரிட்டார். அந்த

பெயரின் அர்த்தம் என்ன?(17:415)

விடை: கர்த்தர் என்னுடைய வெற்றி கொடி

 

43.இஸ்ரவேல் புத்திரர் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டு, சீனாய் வனாந்திரத்தில்

சேர்ந்தது எப்போது?(19:1)

விடை: மூன்றாம் மாதம் முதலாம் நாளிலே.

 

44.மூன்றாம் நாள் விடியற்காலத்தில் என்ன நடந்தது?(19:16)

விடை: இடிமுழக்கங்களும் மின்னல்களும், மலையின் மேல் கார்மேகமும் மகா

                   பலத்த எக்காள சத்தமும் உண்டாயிற்று. பாளயத்திலிருந்து ஜனங்கள்

                   எல்லாரும் நடுங்கினார்கள்.

 

45.“மூன்றாம் நாளுக்கு ஆயத்தப்பட்டிருங்கள், மனைவியினிடத்தில் சேராதிருங்கள்” இது

யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறியது?(19:14-15)

விடை: சீனாய் மலையிலிருந்து இறங்கிய மோசே, ஜனங்களிடத்தில் வந்து,

                  அவர்களைப் பரிசுத்தப்படுத்தும் பொருட்டு இவ்வாறு கூறினார்.

 

46.இஸ்ரவேல் ஜனங்கள் எபிரேயரில் ஒரு அடிமைப் பெண்ணைக் கொண்டால் என்ன

செய்ய வேண்டும் என்று அடிமைகள் பற்றிய பிரமாணங்களில்

கூறப்பட்டிருக்கிறது?(21:2)

விடை: அவ்வடிமை ஆறுவருஷம் சேவித்து, ஏழாம் வருஷத்திலே ஒன்றும்

                  கொடாமல் விடுதலை பெற்றுப் போகக்கடவன் என்று கூறப்பட்டிருக்கிறது.

 

47.திராட்சைத் தோட்டத்திலும், ஒலிவத் தோப்பிலும் ஆறுநாள் வேலையைச் செய்து

ஏழாம் நாளிலே, மாடும் கழுதையும் அடிமைப் பெண்ணின் பிள்ளைகளும்

அந்நியனும் ஓய்ந்திருக்க விடுவாயாக என்று கூறப்பட்டது ஏன்?(23:12)

விடை: மாடும் கழுதையும் இளைப்பாறவும், அடிமைப் பெண்ணின் பிள்ளைகளும்

                 அந்நியனும் இளைப்பாறவும் அவர்களை ஓய்ந்திருக்க விடுவாயாக என்று

                 கூறப்பட்டது.

Best Web Design Batticaloa