03 எண்ணாகமம்

February 21st, 2015

01.பாலைவனத்தில் ஜனங்கள் பசியுடன் இருந்த போது கர்த்தர் ஜனங்களுக்கு கொடுத்த

மன்னாவை பற்றி விபரியுங்கள்?(11:7)

விடை: அந்த மன்னா கொத்துமல்லி விதையம் மாத்திரமும், அதின் நிறம்

                  முத்துப் போலவும் இருந்தது.

 

02.வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்திற்கு இஸ்ரவேல் ஜனங்கள் செல்லும்

சமயத்தில் கர்த்தருக்கு விரோதமாகவும் உண்ண இறைச்சி வேண்டும் என்று

முறுமுறுத்த போது, அவர்களுக்கு அதனை கர்த்தர் எவ்வாறு வழங்கினார்?(11:31)

விடை: கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்ற சமுத்திரத்திலிருந்து

                   காடைகளை அடித்துக் கொண்டு வந்து, பாளயத்திலும் பாளத்தைச்

                   சுற்றிலும், இந்தப்பக்கம் ஒருநாள் பிரயாண மட்டும் அந்தப்பக்கம்

                   ஒருநாள் பிரயாண மட்டும், தரையின் மேல் இரண்டுமுழ உயரம் விழுந்து

                   கிடக்கச் செய்தது.

 

03.இச்சித்தவர்களின் புதைகுழி என்னும் அர்த்தமுடைய “கிப்ரோத் அத்தாவா” என்று

பெயரிடப்பட்டதன் காரணம் என்ன?(11:34)

விடை: இச்சித்த ஜனங்களை அங்கே அடக்கம் பண்ணியதால்.

 

04.ஆரோனும், மிரியாமும் மோசேக்கு விரோதமாக பேசியது ஏன்?(12:1)

விடை: எத்தியோப்பியா தேசத்து ஸ்திரீயை மோசே விவாகம்

                   பண்ணியிருந்தபடியால்.

 

05.மோசேக்கு விரோதமாக பேசியதன் காரணமாக கர்த்தர் மிரியாமுக்கு கொடுத்த

தண்டனை என்ன?(12:10)

விடை: மிரியாம் உறைந்த மழையின்  வெண்மை போன்ற குஷ்டரோகியானாள்.

 

06.கானான் தேசத்தைச் சுற்றிப் பார்க்கும்படி மோசே அனுப்பின மனிதர்களில்

ஒருவனான நூனின் குமாரனாகிய ஒசேயாவின் பெயரை மோசே என்னவாக

மாற்றினான்?(13:16)

விடை: யோசுவா.

 

07.கானான் தேசத்தை வேவுபார்க்க சென்றவர்கள் எவ்வளவு காலம் அங்கே

இருந்தார்கள்?(14:34)

விடை: நாற்பது நாள்.

 

08.பாரான் செல்லும் போது வனாந்திரத்திலே ஜனங்கள் முறையிட்டுக்

கொண்டிருந்ததை கர்த்தர் கேட்ட போது அவருடைய கோபம் மூண்டது.

கர்த்தருடைய அக்கினி அவர்களுக்குள்ளே பற்றியெரிந்து பாளயத்தின்

கடைசியிலிருந்த சிலரைப் பட்சித்தது. அவ்விடத்திற்கு வைக்கப்பட்ட பெயர்

என்ன?(11:2-3)

விடை: அவ்விடத்திற்கு தபேரா என்று பெயரிடப்பட்டது.

 

09.ஆறுலட்சம் ஜனங்கள் பாலைவனத்தில் கால்நடையாக சென்று கொண்டிருந்த

 வேளையில் இறைச்சி சாப்பிடக் கேட்டு முறுமுறுத்த போது, அவர்கள் புசிக்க

எவ்வளவு காலத்திற்கு எவ்வளவு இறைச்சி கொடுத்தார்?(11:20)

விடை: ஒரு மாதம் வரைக்கும், அது அவர்கள் மூக்காலே புறப்பட்டு,

                  அவர்களுக்கு தெவிட்டிப் போகும்மட்டும் புசிக்கக் கொடுத்தார்.

 

10.இஸ்ரவேல் சிலர் கர்த்தரை உதாசீனம் பண்ணி “எகிப்து தேசத்திலிருந்து எங்களைக்

கொண்டு வந்தது ஏன்” என்று முறுமுறுத்துக் கொண்டிருந்ததை கேட்ட கர்த்தர்

மோசேயுடன் இருந்த அந்த ஜனங்களுக்கு என்ன செய்தார்?(11:20,21)

விடை: அவர்கள் மூக்காலே புறப்பட்டு, அவர்களுக்கு தெவிட்டிப் போகும் மட்டும்,

                   ஒரு மாதம் வரைக்கும் அவர்களுக்கு இறைச்சியைப் புசிக்கக்

                   கொடுத்தார்.

  

11.இஸ்ரவேல் ஜனங்களின் பொறுப்பு முழுவதையும் சுமக்க முடியாது என்று மோசே

கூறிய போது ஜனங்களின் மூப்பரில் எழுபது பேரின மேல் கர்த்தருடைய ஆவி

வந்து தங்கின மாத்திரத்தில் அவர்கள் தீர்க்கதரிசனம் சொன்னார்கள். இவர்களில்

இரண்டு பேர் பாளயத்தில் இருந்துவிட்டார்கள். அவர்களின் பெயர்கள் என்ன?(11:26)

விடை: ஒருவன் பேர் எல்தாத், மற்றவன் பேர் மேதாத்.

 

12.பாளயத்தில் இருவர் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள் என்று ஒருவன் வந்து

கூறியபோது, “என் ஆண்டவனாகிய மோசேயே, அவர்களைத் தடைபண்ணும்” என்று

ஒருவர் கூறினார். இது யாரால் யாரைக் குறித்து கூறப்பட்டது?(11:28)

விடை: எல்தாதும் மேதாதும் பாளயத்தில் தீர்க்கதரிசனம் சொல்கிறார்கள்

                   என்பதை கேள்விப்பட்டு, மோசேயினிடத்திலுள்ள வாலிபரில் ஒருவனும்

                  அவனுடைய ஊழியக்காரனும் நூனின் குமாரனாகிய யோசுவாவினால்

                 கூறப்பட்டது.

 

13.இச்சித்த ஜனங்களை அடக்கம்பண்ணின, கிப்ரோத் அத்தாவா என்னும் இடத்தை

விட்டு, அவர்கள் தங்கின இடத்தின் பெயர் என்ன?(11:35)

விடை: ஆஸ்ரோத் என்னும் இடத்தில் தங்கினார்கள்.

 

14.கர்த்தரின் கட்டளைப்படி பாரான் வனாந்திரத்திலிருந்து சுற்றிப் பார்ப்பதற்கு மோசே

வேவுகாரரை அனுப்பியது எந்த தேசத்திற்கு?(13:2-3)

விடை: கர்த்தர் இஸ்ரவேல் புத்திரருக்கு கொடுக்கும் கானான் தேசத்திற்கு.

 

15.மோசேயினால் கானான் தேசத்திற்கு அனுப்பப்பட்ட வேவுகாரர்கள் வடக்கிலே வேவு

பார்த்த பிரதேசம் என்ன?(13:21)

விடை: அவர்கள் சீன் வனாந்திரந் தொடங்கி, ஆமாத்திற்குப் போகிற வழியாகிய

           ரேகோப் மட்டும், தேசத்தைச் சுற்றிப் பார்த்தார்கள்.

 

16.மோசேயினால் கானான் தேசத்திற்கு அனுப்பப்பட்ட வேவுகாரர்களில் இருவர் கட்டித்

தூக்கிக்  கொண்டு வந்தது என்ன? அதைக் கொண்டு வந்த இடத்திற்கு வைத்த

பெயர் என்ன?(13:24)

விடை: அறுத்த திராட்சைக் கொடி. அவ்விடம் எஸ்கோல் பள்ளத்தாக்கு என

                   அழைக்கப்பட்டது  

 

07.கர்த்தரின் கட்டளைப்படி மோசேயினால் கானான் தேசத்திற்கு அனுப்பப்பட்ட

வேவுகாரர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கிலிருந்து எதைக் கொண்டு வந்தார்கள்?(13:23)

விடை: ஒரே குலையுள்ள ஒரு திராட்சைக் கொடியை அறுத்தார்கள். அதை ஒரு

                   தடியிலே இரண்டு பேர் கட்டித் தூக்கிக் கொண்டு வந்தார்கள்.

                  மாதளம்பழங்களிலும் அத்திப்பழங்களிலும் சிலவற்றைக் கொண்டு

                  வந்தார்கள்.

 

18.கானான் தேசத்திற்கு அனுப்பட்ட வேவுகாரர்கள் வரும் போது, எந்த இடத்தில்

மோசேயும் ஆரோனும் தங்கியிருந்தார்கள்?(13:26)

  விடை: பாரான் வனாந்திரத்தில் இருக்கிற காதேஸ் என்னும் இடத்தில்.

 

19.“நாம்  உடனே போய் அதைச் சுதந்தரித்துக் கொள்வோம். நாம் அதை எளிதாய்

ஜெயித்துக் கொள்வோம்” என்று கூறியது யார்?(13:30)

விடை: காலேப்.

 

20.கானான் தேசத்திற்கு சென்று வேவு பார்த்தவர்கள் கூறிய பொய்யினால் இஸ்ரவேல்

ஜனங்கள் மோசேக்கும் ஆரோனுக்கும் விரோதமாக முறுமுறுத்து கூறிய யோசனை

என்ன?(14:4)

விடை: நாம் ஒரு தலைவனை ஏற்படுத்திக் கொண்டு எகிப்துக்குத் திரும்பிப்

                  போவோம் என்று ஒருவரோடொருவர் சொல்லிக் கொண்டார்கள்.

 

21.கர்த்தர் எகிப்திலும் வனாந்திரத்திலும் செய்த அடையாளங்களையும், கர்த்தரின்

மகிமையையும் கண்டிருந்தும் இஸ்ரவேல் ஜனங்கள் எத்தனை முறை கர்த்தரை

பரீட்சித்துப் பார்த்தார்கள்?(14:22)

விடை: பத்துமுறை கர்த்தரை பரீட்சித்துப் பார்த்தார்கள்.

 

22.கானான் தேசத்திற்கு வேவுபார்க்க சென்றவர்கள் கூறிய பொய் ஜனங்கள் மத்தியில்

பரவியதால் அவர்கள் கர்த்தருடைய சந்நிதியில் வாதையினால் செத்தார்கள்.

உயிரோடிருந்தவர்களின் பெயர்கள் என்ன?(14:38)

விடை: நூனின் குமாரனாகிய யோசுவாவும், எப்புன்னேயின் குமாரனாகிய

                  காலேபும்.

 

23.மோசேயின் வார்த்தைக்கு செவி கொடாமல் தன்னிச்சையாக மலையின் உச்சியில்

ஏறிய ஜனங்களை, அமலேக்கியரும் கானானியரும் அந்த மலையிலே இருந்து

இறங்கிவந்து, அவர்களை முறிய அடித்து அவர்களை எதுவரை துரத்தினார்கள்?(14:44-  45)

விடை: ஒர்மா மட்டும் துரத்தினார்கள்.

 

 

 

 

 

 

 

Best Web Design Batticaloa